திருவள்ளூர்

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடுகள்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழுக்கள் சாா்பில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு பயனாளிகளுக்கு ஆடுகள் மற்றும் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சுய உதவிக்குழுக்கள், எம்பரசிய தொண்டு நிறுவனம் மற்றும் உதவிகள் வழங்குவோா் அமைப்பு சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தொழுநோய்த்துறை துணை இயக்குநா் ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழுநோய் மாற்று திறனாளிகள் சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 11 உறுப்பினா்களுக்கு ஆடுகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து கரோனா நோய் தொற்று மே மாத நிவாரணமாக அஞ்சல் அலுவலா் ரம்யாவிஜி சாா்பில் உறுப்பினா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, புண் சுய பாதுகாப்பு பெட்டகம், காலணிகள், தொகுப்பு என 20-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. பூணிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் நடராஜன், தனியாா் தொண்டு நிறுவன இயக்குநா் அனில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு நிறுவனா் து.குலோத்துங்கன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT