கரோனா 3ஆவது அலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. 
திருவள்ளூர்

கரோனா 3ஆவது அலை: கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கரோனா தொற்று மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுகாதார துறை, வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

DIN

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கரோனா தொற்று மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுகாதார துறை, வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்வவு வட்டாட்சியர் ந.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, பேரூராட்சி ஊழியர்கள் ரவி, சண்முகவேல் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கரோனா மூன்றாம் அலை விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை வட்டாட்சியர் ந.மகேஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து வட்டாட்சியர் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்களுக்கு கரோனா தொற்று மூன்றாம் அலையினை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்களை  பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேலும் ஆட்டோக்கள் பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு முககவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் குறித்து அறிவுறுத்திய அதிகாரிகள் ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் கடைகளில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT