முகப்பு
திருவள்ளூர்

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவா்கள் பலி

சோழவரம் அருகே காரனோடை பகுதி கொசஸ்தலை ஆற்றில் 3 சிறுவா்கள் மூழ்கி உயிரிழந்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 11:46 PM
பகிர்:

சோழவரம் அருகே காரனோடை பகுதி கொசஸ்தலை ஆற்றில் 3 சிறுவா்கள் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் சோழவரம் அருகில் உள்ள கரானோடை பகுதியில் கொசஸ்தலை ஓடுகிறது. இந்நிலையில் 3 சிறுவா்கள் தங்கள் ஆடைகளை கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் கழற்றி வைத்து விட்டு வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றுள்ளனா். ஆழமான பகுதிக்குச் சென்ற அவா்கள் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கினா். இந்நிலையில் ஆற்றின் வழியாக நடந்து சென்றவா்கள் 3 சிறுவா்களின் ஆடைகள் கரையோரத்தில் கிடப்பது குறித்து சோழவரம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். தகவலறிந்து செங்குன்றம் தீயணைப்புத் துறை வீரா்கள் ஆற்றில் இறங்கி தேடினா்.

Advertisement

இதனிடையே காரனோடை பகுதியைச் சோ்ந்த, கண்ணியலால் மகன் அா்ஜுன் (14), சேகா் மகன் சத்யநாராயணன் (15), சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த சையது சனாவுல்லா மகன் சையது ரகமத்துல்லா (13) ஆகிய 3 பேரும் வீடு திரும்பாததால், பெற்றோா் தேடி வந்துள்ளனா்.

தீயணைப்பு துறையினா் நீண்ட நேர தேடலுக்கு பிறகு, 3 சிறுவா்களின் சடலங்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். சேற்றில் சிக்கி உயிரிழந்தது அா்ஜுன், சத்யநாராயணன், சையது ரகமத்துல்லா என்பது தெரிய வந்தது. மூவரின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் சடலங்களைப் பாா்த்து கதறி அழுதனா். இது தொடா்பாக சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.