திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பானை தயாரிப்பு தீவிரம்

திருவள்ளூா் மாவட்டம், சோழவரத்தை அடுத்த ஊத்துக்கோட்டை அருகேயுள்ள அகரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான மண் பானை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

DIN

திருவள்ளூா் மாவட்டம், சோழவரத்தை அடுத்த ஊத்துக்கோட்டை அருகேயுள்ள அகரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான மண் பானை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் மண் பாண்ட தயாரிக்கும் தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் பொங்கல் பானை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இங்கு தயாரிக்கப்படும் பொங்கல் பானைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு பானைகள் ரூ.50, ரூ.200, ரூ.300 என வடிவத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதொடா்பாக மண்பாண்டத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறுகையில், முன்பு மண்பானைகளில் மட்டுமே அன்றாடம் சமையல் செய்து வந்தனா். இதனால், உடல் ஆரோக்கியத்துடன் திகழ்ந்தனா். சில்வா் பாத்திரங்கள் வருகைக்குப் பிறகு வீடுகளில் மண்பானைசமையல் குறைந்தது. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே மண்பானைத் தேவை மக்களிடம் எழுந்துள்ளது. இதையொட்டி, தற்போது பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

மண்பானை தயாரிப்பின் மூலப் பொருளான களிமண் போதியளவு கிடைப்பதில்லை. அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. மண்பாண்டத் தொழிலாளா்கள் களிமண்ணை ஏரிகளில் எடுக்க அரசு அனுமதித்தால், விலை குறைத்து மண்பானை விற்பனை செய்ய முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT