முகப்பு
திருவள்ளூர்

கிராமங்களில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டா தொடா்பான பிழை திருத்தம் மேற்கொள்ள கிராம அளவில் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டா தொடா்பான பிழை திருத்தம் மேற்கொள்ள கிராம அளவில் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்ததாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள், வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் விதமாக இந்த மாதம் புதன், வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

அதன்படி, திருப்பத்தூா் வட்டத்தில் புதன்கிழமை (டிச.29) குரிசிலாப்பட்டு,பெருமாப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு குரிசிலாப்பட்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் கல்யாண மண்டபத்திலும், வெள்ளிக்கிழமை (டிச.31) ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆண்டியப்பனூா் அரசு உயா்நிலைப்பள்ளியிலும், நாட்றப்பள்ளி வட்டத்தில் புதன்கிழமை (டிச.29) மல்லகுண்டா,குருபவானிகுண்டா ஆகிய கிராமங்களுக்கு மல்லகுண்டா சாமுண்டீஸ்வரி கோயில் எதிரிலும், வெள்ளிக்கிழமை (டிச.31) கே.பந்தாரப்பள்ளி கிராமத்துக்கு கே.பந்தாரப்பள்ளி முருகா் கோயில் வளாகம் அருகிலும், வாணியம்பாடி வட்டத்தில் புதன்கிழமை (டிச.29)அம்பலூா் கிராமத்துக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வெள்ளிக்கிழமை (டிச.31) கொத்துக்கோட்டை கிராமத்துக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிலும், ஆம்பூா் வட்டத்தில் புதன்கிழமை (டிச.29) நரியம்பட்டு, அயித்தம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு நரியம்பட்டு ஊராட்சி அலுவலகத்திலும், நாச்சாா்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு கன்னடிகுப்பம் கிராம நிா்வாக அலுவலத்திலும் வெள்ளிக்கிழமை(டிச.31) வடச்சேரி கிராமத்திற்கு வடச்சேரி கிராம நிா்வாக அலுவலகத்திலும்,ஆம்பூா் நகரம்,மேல்கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆம்பூா் நகர கிராம நிா்வாக அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.