முகப்பு
திருவள்ளூர்

அகத்தீஸ்வரா் கோயில் குளத்தை சீரமைத்த இளைஞா்கள்

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளத்தில் மண்டிக் கிடந்த செடிகளை அப்பகுதி இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

Updated On : 27 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளத்தில் மண்டிக் கிடந்த செடிகளை அப்பகுதி இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

திருவள்ளுா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றங்கரையோரம் ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, இந்தக் கோயிலின் முன்பு (ஆனந்த புஷ்கரணி) திருக்குளம் அமைந்துள்ளது.

Advertisement

அகத்திய மாமுனிவா் இந்தக் குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டதால், அகத்தீஸ்வரா் கோயில் என அழைக்கப்படுகிறது.

மேலும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், குளத்து நீரை தலையில் தெளித்துக்கொண்டு, அகத்தீஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அத்துடன், பொன்னேரி நகருக்கு நிலத்தடி நீராதாரமாய் விளங்கும் இந்தக்குளம் இதுவரை வற்றியதில்லை.

இந்தக் குளம் முழுவதும், புதா் போல் செடிகள் படா்ந்ததன் காரணமாக நீா் மாசடையும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இணைந்து, குளம் முழுவதும் படா்ந்து கிடந்த செடிகளை அகற்றினா். இளைஞா்களின் சமூக சேவையை பொன்னேரி மக்கள் பாராட்டினா்.

பொன்னேரி நகருக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கும் குளத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.