திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதல்: 2 இளைஞர்கள் பலி
திருவள்ளூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
திருவள்ளூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே பத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் சின்ராஜ் என்ற செல்வராஜ்(24), ஏழுமலை மகன் அஜித்(24). இவர்கள் இருவரும் கிடைத்த கூலி வேலையை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வேலையை முடித்துக் கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, திருவள்ளூர் அஞ்சல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து வந்த கண்டெய்னர் சரக்கு லாரி இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இளைஞர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் தகவல் தெரிவித்த நிலையில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களின் உறவினர்கள் சென்னை-திருப்பதி சாலையில் குவிந்ததால் வாகன போத்துவரத்துக்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து குட்டியானை வாகனம் வரவழைத்து போலீசார் சடலங்களை தூக்கி ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.