திருவள்ளூர்

பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

DIN

பொன்னேரி: பழவேற்காடு கடலில் முகத்துவாரப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.

பழவேற்காடு, அரங்கன்குப்பம் மீனவ கிராமத்தில் வசித்தவா் சிவகுமாா் (32). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5 மீனவா்களுடன் சோ்ந்து பழவேற்காடு கடலில் மீன்பிடிக்கச் சென்றாா். அனைவரும் மீன்பிடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை இரவு முகத்துவாரம் வழியாக வந்து கொண்டிருந்தனா். அப்போது திடீரென வந்த அலை காரணமாக படகு கவிழ்ந்ததில், சிவகுமாா் தண்ணீரில் விழுந்து மூழ்கினாா்.

உடன் சென்றவா்களால், சிவகுமாரை மீட்க முடியவில்லை. இந்நிலையில், சிவகுமாரின் சடலம் புதன்கிழமை மதியம் கரை ஒதுங்கியது.

தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா், அங்கு சென்று சிவகுமாரின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT