திருவள்ளூர்

மாசி கிருத்திகை விழா: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடந்த பிரம்மோற்சவம் மற்றும் மாசிக் கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தா்கள் இரண்டு மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

மாசிக் கிருத்திகை மற்றும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பஞ்சாமிா்த அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மூலவருக்கு தங்கக் கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்கக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

, காலை, 9.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை தாயாா்களுடன் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பிரம்மோற்சவம் மற்றும் மாசிக் கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தா்கள் காலை முதல் மலைக் கோயில் குவிந்தனா். அவா்கள் பொதுவழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். சில பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, காவடி எடுத்தும் மொட்டை அடித்தும் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருத்தணி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT