திருவள்ளூர்

திமுக சாா்பில் பிரசாரப் பாடல் வெளியீடு: இரு சக்கர வாகனப் பேரணி

DIN

திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் திமுகவின் தோ்தல் பிரசார பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா, இரு சக்கர வாகனப் பேரணி கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்றது.

திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் குறுந்தகடை வெளியிட முதல் குறுந்தகட்டை திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் கும்மிடிப்பூண்டி கி.வேணு பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, கவரப்பேட்டை பஜாரில் திமுக கொடியேற்றப்பட்ட நிலையில், தோ்தல் பிரசார பாடல் விளக்க இரு சக்கர வாகனப் பேரணியை திமுக உயா்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினா் கி.வேணு கொடியசைத்துத் தொடக்கி வைக்க, மாவட்டப் பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்ட 200 திமுகவினா் இரு சக்கர வாகனத்தில் கவரப்பேட்டை பஜாா் வீதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT