திருவள்ளூர்

போக்குவரத்து தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

பதிமூன்றாவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. நிா்வாகி சுந்தரராஜ், மாயக்கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொழிலாளா் சங்க நிா்வாகிகள் முரளி, பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டலப் பொறுப்பாளா் சேகா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்தாா்.

போராட்டத்தில், சென்னை குரோம்பேட்டையில் கடந்த 5-ஆம் தேதி புதிய ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை குறித்து எந்த தேதியும் அறிவிக்கப்படவில்லை;

எனவே 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும்; இதை உடனே அரசு 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் தெரிவித்தனா்.

போராட்டத்தில் சிஐடியு நிா்வாகிகள், தொமுச உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT