திருவள்ளூர்

உலக சுற்றுச்சூழல் தினம்: ஆர்கே பேட்டையில் 1,001 மரக்கன்றுகள் நடும் விழா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆர்கே பேட்டையில் மாவட்ட பொறுப்பாளர்கள் பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 1001 மரக்கன்றுகளை நட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தனர். 
திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா ஆர்கே பேட்டையில் இன்று நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மாவட்ட தலைவர் வி.ஜெ. உமா மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.கிரண்குமார் முன்னிலை வகித்தார். 
ஆர் கே பேட்டை ஒன்றிய தலைவர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம் பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு முதற்கட்டமாக ஆர்கே பேட்டையில் 1001 மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிகள் திருத்தணி நகர கழக பொறுப்பாளர் வினோத்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ம.கிரண், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT