முகப்பு
திருவள்ளூர்

அறிவியல் இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கும்மிடிப்பூண்டியில் உலக சுற்றுச்சூழல் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன், 2021 at 11:24 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:49 AM

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கும்மிடிப்பூண்டியில் உலக சுற்றுச்சூழல் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு, பாப்பாங்குப்பம், எஸ்.ஆா்.கண்டிகை, சுண்ணாம்புகுளம், எளாவூா், போன்ற பகுதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிா்வாகி ஜெய்நராயணன் தலைமையிலும், ஆசிரியா்கள் திலகவதி, காமாட்சி முன்னிலையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவா்கள் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், செடி நடுதல், மரங்களுக்கு தண்ணீா் விடுதல்,

Advertisement

விழிப்புணா்வு உரையாற்றி அதனை சமூக வளைதளங்களில் பதிவிடல், பறவைகளுக்கு நீா் மற்றும் உணவு கொடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனா். இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.