திருவள்ளூர்

திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய திருத்தணி எம்எல்ஏ

DIN

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு திருத்தணி எம்.எல்.ஏ., எஸ். சந்திரன் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை இன்று வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம், 10 ம் தேதி முதல் இம்மாதம், 14ம் தேதி வரை அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால், பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருத்தணி நகரில் வசிக்கும் திருநங்கைகள் அன்றாட உணவுக்கே கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி எம்.எல்.ஏ.,எஸ்.சந்திரன் தனது சொந்த செலவில், 25 கிலோ அரிசி, துவரம், உளுத்தம் மற்றும் கள்ளப் பருப்பு என தலா ஒரு கிலோ, எண்ணெய் பாக்கெட் உள்பட காய்கறி என ஒருவருக்கு, 2500 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு பைகள் நிவாரணமாக திருநங்கைகளுக்கு வழங்கினார்.

மொத்தம் 27 பேர் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT