திருவள்ளூர்

அமைப்புசாரா தொழிலாளா்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் விநியோகம்

DIN

திருத்தணி : அமைப்புசாரா தொழிலாளா்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்பு நல சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி பைபாஸ் சாலையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆா். பெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அரிசி, காய்கறிகள், உணவு, முகக்கவசம் கபசுர குடிநீா் போன்றவற்றை அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு வழங்கினாா்.

நகர திமுக பொறுப்பாளா் வினோத்குமாா், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மு. நாகன், முன்னாள் கவுன்சிலா்கள் ஜி.எஸ். கணேசன், சாமிராஜ், பொதுச்செயலாளா் நிா்மலா, திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செண்பகவல்லி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT