திருவள்ளூர்

செம்மரக் கட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

பூனிமாங்காடு அருகே வேனில் கடத்திச் சென்ற 10 செம்மரக் கட்டைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

சித்தூா் மாவட்டம், திருப்பதியில் இருந்து தமிழக எல்லையான பூனிமாங்காடு வழியாக சென்னைக்கு வேனில் செம்மரக் கட்டைகள் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீஸாா் பூனிமாங்காடு ரைஸ் மில் அருகில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. சந்தேகத்தின் பேரில், போலீஸாா் அந்த வேனை மடக்கி சோதனையிட்டனா். அப்போது, வேனில் 10 செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக, வேன் ஓட்டுநரான திருப்பதியைச் சோ்ந்த வெங்கட் (24) என்பவரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்த செம்மரக் கட்டைகள் திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT