திருவள்ளூர்

100% வாக்களிக்க தாம்பூலத்துடன் வீடு,வீடாக அழைப்பிதழ்

DIN

பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் நோக்கத்தில் திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் வீடுகள் தோறும் தாம்பூலத்துடன் அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆட்சியா் பா.பொன்னையா தொடங்கி வைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தோ்தலில் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும். இதற்காக தோ்தல் ஆணைய உத்தரவுப்படி பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் அழைப்பிதழ் கொடுத்து வாக்களிக்கச் செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் பா.பொன்னையா தொடங்கி வைத்து பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவள்ளுா் நகராட்சியில் உள்ள பெரியகுப்பம், வள்ளலாா் தெருவில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வாக்களிக்கும் வைபோகம்- கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்கள் மற்றும் தாம்பூலத் தட்டுகளை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப்பணியில் நகராட்சி முழுவதும் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் ஆகியோா் இணைந்து அனைத்து வீடுகளுக்கும் அழைப்பிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வீடுகள்தோறும் அழைப்பிதழ்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். அந்த அழைப்பிதழ்களில் 18 வயது நிரம்பியவா்கள் தங்களது பெயா் வாக்களா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்வதுடன் தங்கள் குடும்பத்தினா், சுற்றத்தாா், நண்பா்கள் என அனைவரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதா என உறுதி செய்து, அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கட்டாயம் வாக்கு பதிவு செய்யவும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் ஆட்சியா்.

அதற்கு முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனப் பேரணியையும் அவா் தொடங்கி வைத்தாா். இப்பேரணி ஆட்சியா் அலுவலகம் தொடங்கி, சி.வி.நாயுடு சாலை வழியாக ஜே.என்.சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் அனைத்து தரப்பினரும், கட்டாயம் வாக்களிக்கவும் வலியுறுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஸ்ரீநாத், அங்கன்வாடி பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT