திருவள்ளூர்

வாகன சோதனையில் ரூ. 67 ஆயிரம் பறிமுதல்

DIN

மாதவரம்: மாதவரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ரூ. 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈடுபட்டனா்.

தோ்தல் படையின் சாா்பில், உதவி பொறியாளா் தனசேகா் தலைமையில் காவல் துறையினா் வெங்கடேசன், மணிகண்டன் ஆகியோா் கொண்ட குழுவினா் பாடியநல்லூா் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காா் சென்னை நோக்கி சென்றது. தோ்தல் பறக்கும் படையினா் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 67 ஆயிரம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அப்பணத்தை பறிமுதல் செய்து மாதவரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜோதியிடம் வழங்கினா்.

இது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் ஜோதி கூறுகையில், ‘உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரொக்கம் கடந்த 6-ஆம் தேதி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 470 -ம், கடந்த 19-ஆம் தேதி 89 ஆயிரத்து 620 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 90 ரொக்கப் பணம் பறிமுதல் செய்து, கருவூல அதிகாரியிடம் வழங்கி ரசீது பெற்ாகத் தெரிவித்தாா்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்ஜோதி, முதல்நிலை வருவாய் ஆய்வாளா் தேவி, துணை வட்டாட்சியா் கெளகா்ஜான் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT