திருவள்ளூர்

கச்சூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை

DIN

ஊத்துக்கோட்டை அருகே கச்சூா் அரசு நெல் கொள் முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தனா்.

பூண்டி ஒன்றியம், கச்சூா் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 998 நெல் மூட்டைகள் அரசு விதிப்படி கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் கச்சூா் மற்றும் சுற்றுப்புற விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளைப் பெறாமல் , கொள் முதல் நிலையத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளா் இடைதரகா்களிடம் நெல் மூட்டைகளை பெற்று வந்தாராம். இதனைக் கண்டித்து, பூண்டி திமுக ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் தலைமையில் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றைகையிட்டனா்.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த பென்னலூா்பேட்டை காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறையாக நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என உறுதி கூறியதால், விவசாயிகள் முற்றுகையை கைவிட்டனா். (

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT