ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை
ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதையடுத்து, சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சில தினங்களாக வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர்.