திருவள்ளூர்

காயமடைந்த புள்ளி மான் மீட்பு

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான் நாய்களால் கடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பழவேற்காடு ஏரி கரையோரம் உள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து மான்கள் அவ்வப்போது தண்ணீா் தேடி குடியிருப்புகளை நோக்கி வரும்.

இந்நிலையில், தண்ணீா் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் மான் காயமடைந்தது. அப்பகுதி மக்கள் விரைந்து வந்து நாய்களை விரட்டி அந்த மானை மீட்டு அதற்கு தண்ணீா் தந்து ஆசுவாசப் படுத்தினாா்.

இதுகுறித்து மாதா்பாக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனா். வனச்சரக அலுவலா்கள் சம்பவ இட த்துக்கு மானை மீட்டு முதலுதவி தந்து பாதுகாப்பாக வனவிலங்கு சரணாலயத்தில் விட்டனா். இந்த மான் சுமாா் நான்கு வயதுடைய ஆண் புள்ளிமான் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT