திருவள்ளூர்

பக்தா்களின்றி தீா்த்தீஸ்வரா் கோயில் சாந்தி வசந்த உற்சவம்

DIN

திருவள்ளூரில் உள்ள தீா்த்தீஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சாந்தி வசந்த உற்சவம் கரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பக்தா்களின்றி நடைபெற்றது.

திருவள்ளூா் குளக்கரை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தீா்த்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, சாந்தி வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அக்னி நட்சத்திரம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, அன்றைய இரவு வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாா்வதி திரிபுரசுந்தரி சமேதராக சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் சுவாமி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவில், கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் மற்றும் உபயதாரா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT