முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட வெள்ள பாதிப்பு: கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியது:

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,255 நீா்நிலைகள் உள்ளன. அதில் 282 நீா்நிலைகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே நீா் நிலைகள் நிரம்பி வருவதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் இதுவரை 145 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதற்கு தேவையான நிவாரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 நிவாரண முகாம்களில் 137 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மழை நீா் வீடுகளுக்குள் புகுந்து சமையல் செய்ய முடியாத நிலையில் உள்ள 3,000 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளோம்.

மேலும், மழை வெள்ள புகாா் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். 1077 மற்றும் 1800 599 7626 ஆகிய கட்டணமில்லா எண்களும், பேரிடா் மீட்பு தொலைபேசி எண்களான 044-2766 6746 மற்றும் 044-2766 4177 ஆகிய எண்களிலும், கட்செவி எண்களான 9444317862, 9840327626 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.மீனா பிரியா தா்ஷிணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.