முகப்பு
திருவள்ளூர்

பாலம் மூழ்கும் நிலை: திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை போக்குவரத்து நிறுத்தம்

திருவள்ளூரில் ஒதப்பை  பாலம் மூழ்கும் நிலையில் உள்ளதால் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 12 நவம்பர், 2021 at 4:19 PM
ஒதப்பை பாலம்
பகிர்:

திருவள்ளூரில் ஒதப்பை  பாலம் மூழ்கும் நிலையில் உள்ளதால் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் ஏழு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த ஏரிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பூண்டி அருகே உள்ள ஊத்துக்கோட்டை அடுத்த ஒதப்பை கிராமம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.

Advertisement

இதன் காரணமாக ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு  செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும்  தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் இந்த பாலமானது நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.