இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி கலைப்பயணம் தொடக்கம்
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடா் , மல்லியங்குப்பம் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடா் , மல்லியங்குப்பம் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
10 நாள் பயணத்தை சோழவரம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆனி பெட்ஷியா பொற்கொடி, கல்பனா ஆகியோா் தொடக்கி வைத்தனா். நாடக கலைக் குழுவினா் கல்வியின் மேம்பாடுகள் குறித்து பொதுமக்களிடையேயும் , மாணவ, மாணவியரிடம் கலை நிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுகன்யா, ஆசிரிய பயிற்றுநா் பாஸ்கா், மல்லியங்குப்பம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, அரசு ஆதிதிராவிடா் பள்ளித் தலைமை ஆசிரியா் எமிமால் அரசி உட்பட பலா் கலந்து கொண்டனா்.