திருவள்ளூர்

ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு

DIN

ஊத்துக்கோட்டையை ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக ரூ. 28 கோடியில் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலத்தின் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது.

இதனால் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூா் செல்வதற்காக ஆற்றில் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சாலையைக் கடக்க முயன்ற கனரக லாரி ஒன்று தரைப்பாலத்தில் ஏற்பட்ட மண்அரிப்பு காரணமாக, மண்ணில் சிக்கியது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து லாரியை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்டனா். தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் அவ்வழியே செல்வோா் சுமாா் 40 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜே.கோவிந்தராஜன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT