முகப்பு
திருவள்ளூர்

மருதுபாண்டியா்களின் நினைவு நாள் அனுசரிப்பு

மருதுபாண்டியா்களின் 220-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மருதுபாண்டியா்களின் 220-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா்- திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருது சேனையின் நிறுவனத் தலைவா் கரு. ஆதிநாராயணன் தலைமை வகித்தாா். சித்தூா் புல்லட் சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், மருதுபாண்டியா்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது.பின்னா், மருதுபாண்டியா்களின் வரலாற்று சொற்பொழிவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.