கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள நிலையில், தொழிற்சாலைளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரி செய்யும் வகையில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகம் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 1550 மரக்கன்றுகள் நடும் விழா சிப்காட் திட்ட மேலாளர் சாய் லோகேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்விற்கு தலைமை தாங்கிய கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் 1550 மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்து, சிப்காட் வளாகத்தை சுற்றுச்சூழலை காக்கும் பகுதியாக மாற்றுவது தொழிற்சாலைகளின் கடமை என்றார்.
நிகழ்வில் உதவி பொறியாளர் சரவணண் நித்தின், வன சரகர் சுரேஷ்பாபு , கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர்i பாலசுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன்,திமுக நிர்வாகிகள் அறிவழகன், திருமலை, பாஸ்கரன், ரமேஷ், குமார், பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மேலக்கழனி பத்மஜா கௌரிசங்கர், ஏனாதிமேல்பாக்கம் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் அலகு 1-இல் 4,338 மரக்கன்றுகளும், சிப்காட்டில் அலகு 2இல் மட்டும் 9,429 மரக்கன்றுகள் என மொத்தம் 13,767 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்ட நிலையில். முதல்கட்டமாக அலகு 1-இல் 4,338 மரக்கன்றுகள் ஏற்கெனவே நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது அலகு 2-இல் 1550 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. எஞ்சிய மரக்கன்றுகள் விரைவில் நட்டு முடிக்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.