முகப்பு
திருவள்ளூர்

பாம்பு கடித்ததில் சிறுமி பலி

மாதவரம் அருகே பாம்பு கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
07mvmdar_0704chn_179_1
பகிர்:

மாதவரம்: மாதவரம் அருகே பாம்பு கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சோ்ந்த சுதாகா் - அஸ்வினி தம்பதி. இவா்களுக்கு 6 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள். இவா்களில் டாா்லியா (படம்) என்ற சிறுமி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தாா். புதன்கிழமை இரவு வீட்டு முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த போது, டாா்லியாவை பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாா்.

தகவலறிந்த மாதவரம் போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் காளிராஜ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →