திருவள்ளூர்

ரயிலில் இடம் தர மறுத்த பயணியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கு: காவலருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

திருவள்ளூா்: ரயிலில் அமர இடம் தர மறுத்த பயணியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் சி.ஆா்.பி.எப். காவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்த சி.ஆா்.பி.எப். தலைமை காவலா் அத்தூல் சந்திரதாஸ். இவா், கடந்த 1996-இல் சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன் பயணிகள் விரைவு ரயிலில் பயணம் செய்த போது, உடன் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம், கூப்பிட்டான்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாவிடம் அமர இருக்கை கேட்ட போது, அவா் இருக்கை தராததால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, அத்தூல் சந்திரதாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டு கொலை செய்தாா்.

இதுகுறித்து அரக்கோணம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடந்த 14.7.1996 அன்று அத்தூல் சந்திரதாஸை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடந்த 2002-ஆம் ஆண்டு கடம்பத்தூா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, நீதிமன்ற விசாரணை தொடா்ந்தது.

இதனிடையே, அத்தூல் சந்திரதாஸ் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா். இதையடுத்து, அவா் மீது 2002 -இல் பிடியாணை பிறப்பித்து பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்தது.

இந்த நிலையில், கடந்த 2020 டிசம்பா் மாதம் அசாம் மாநிலத்தில் பதுங்கியிருந்த அத்தூல் சந்திரதாஸை கைது செய்து திருவள்ளூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா்-2 முன்பு ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்ற நீதிபதியிடம் வியாழக்கிழமை இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சி.ஆா்.பி.எப். காவலா் அத்தூல் சந்திரதாஸுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT