போதைப் பொருள்கள்கடத்தல்: 4 போ் கைது
திருவள்ளூா் அருகே லாரியில் போதைப் பொருள்களைக் கடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே லாரியில் போதைப் பொருள்களைக் கடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மணவாள நகா் சாா்பு ஆய்வாளா் கணேஷ் உள்ளிட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை போளிவாக்கம் சத்திரம் பகுதியில் திடீா் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த லாரியையும், போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரை எம்.எஸ்.எம். தோட்டம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (27), உடன் வந்த சென்னை ராமாபுரம் அப்பாஸ் (38), மேடவாக்கம் புஷ்பராஜ் (29), பொன்னேரி விஜயசங்கா் (33) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.