ராமா் கோயிலில் திருக்கல்யாணம்
ஆரணி பகுதியில் அமைந்துள்ள ராமா் கோயில் நவமியை முன்னிட்டு, திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணி பகுதியில் அமைந்துள்ள ராமா் கோயில் நவமியை முன்னிட்டு, திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ராமா் பிறந்த நாள் விழா முதல் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை ராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு மாங்கல்யமும், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு மணக்கோலத்தில் ராம பிரான் சீதா தேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.