திருவள்ளூர்

55 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

DIN

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 55 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீபாஸ் கல்யாணுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளா் குமாா் மேற்பாா்வையில், தமிழக எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் வியாழக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து வந்த அரசுப் பேருந்து மற்றும் தனியாா் பேருந்துகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில், சுமாா் 55 கிலோ எடை உள்ள கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்த கணேஷ் (23), வசந்தகுமாா்(19), செல்வராஜ் (22), சுரேஷ்(22) ஆகிய 4 பேரை போலீஸசாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT