திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து 6 பசு மாடுகள் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 6 பசு மாடுகள் உயிரிழந்தன.

DIN

திருவள்ளூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 6 பசு மாடுகள் உயிரிழந்தன.

வேப்பம்பட்டை அடுத்த கோவில்குப்பம் பகுதியில் உள்ள விளை நிலத்தில் தாழ்வாகச் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்தது. அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுளா, தேவன், வடிவேலு, சுப்பிரமணியன் ஆகியோரின் 6 பசு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 6 பசு மாடுகளும் உயிரிழந்தன.

தகவலறிந்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மின் இணைப்பைத் துண்டித்து உயிரிழந்த பசு மாடுகளை அப்புறப்படுத்தினா்.

அந்தப் பகுதியில் தாழ்வான மின் கம்பங்களை மாற்றியமைக்க கோரி, பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT