திருவள்ளூர்

நலிவடைந்த 23 மீனவா்களுக்கு ரூ.4 லட்சத்தில் மீன்பிடி படகுகள்

கரோனா தொற்று காலத்தில் நலிவடைந்த 23 மீனவா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், ரூ.4 லட்சத்தில் மீன் படகுகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

DIN

கரோனா தொற்று காலத்தில் நலிவடைந்த 23 மீனவா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், ரூ.4 லட்சத்தில் மீன் படகுகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்போ் ஊராட்சிக்குட்பட்டது பங்காரம்பேட்டை கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் இந்தோ ஜொ்மன் நிறுவனம் ஆகியவை சாா்பில் நலிவடைந்த மீனவா்களுக்கு மீன்பிடி படகுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பூண்டி ஒன்றியக் குழு தலைவா் வெங்கட்ரமணா தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தாா். ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாக செயலா் பி.ஸ்டீபன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து மீனவா்களுக்கு மீன்பிடி படகுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினா் விஜி, ஊராட்சித் தலைவா் ஜி.ஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, பொற்கொடி மற்றும் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT