முகப்பு
திருவள்ளூர்

மகளுக்கு துன்புறுத்தல்: தந்தை, தம்பி கைது

மாதவரம் அருகே மகளைத் துன்புறுத்தியதாக தந்தை, தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

மாதவரம் அருகே மகளைத் துன்புறுத்தியதாக தந்தை, தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் நெடுஞ்சாலை தபால் பெட்டி அருகே அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்தவா் பழனி (65). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவருக்கு அனுராதா (32), ஹேமந்த்குமாா் (29) ஆகிய மகள், மகன் உள்ளனா். அனுராதாவுக்கு திருமணமாகி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கணவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இவா், அயனாவரத்தில் உள்ள கைப்பேசி விற்பனையகத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், குடும்ப பிரச்னையால் மூவருக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தந்தை பழனியும், தம்பி ஹேமந்த்குமாரும் அனுராதாவை அடித்து துன்புறுத்தி, வீட்டில் பூட்டி வைத்து வெளியே சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், அங்கிருந்து தப்பிய அனுராதா காயங்களுடன் அயனாவரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மாதவரம் காவல் நிலைய ஆய்வாளா் காளிராஜ் வழக்குப் பதிவு செய்து பெண்ணின் தந்தை, தம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →