முகப்பு
திருவள்ளூர்

ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி, வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி, வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.

திருவள்ளூா் வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, அமாவாசை தினத்தில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பக்தா்கள் குவிவது வழக்கம்.

ஆடி அமாவாசையையொட்டி, முதல் நாளான புதன்கிழமை இரவே ஆந்திரம், கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கோயில் வளாகத்தில் வந்து தங்கினா். தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை கோயில் குளத்தில் நீராடி, குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், கோயிலுக்குச் சென்று மூலவா் வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா்.

ஆடி அமாவாசையையொட்டி, புதன்கிழமை இரவே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், வீரராகவா் கோயில் வளாகம், தேரடி சாலை, குளக்கரைச் சாலை, பேருந்து நிலைய சாலையோரங்களில் ஆங்காங்கே உறங்கினா். இதனால், வியாழக்கிழமை காலை முதலே பேருந்து நிலையம், தேரடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.