திருத்தணியில் மலைக்கோயிலுக்கு ஊா்ந்து சென்ற வாகனங்கள். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

DIN

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்கின்றனா். இந்த நிலையில், ஆடி மாதம் மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நுாற்றுக்கணக்கான பக்தா்கள் காா், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக மலைக் கோயிலுக்குச் செல்ல முயன்றனா்.

அதிக வாகனங்கள் மலைப் பாதையில் சென்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மலைக்கோயில் மாட வீதியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் அங்கும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீஸாா் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமத்துக்குள்ளாகி தவித்தனா்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை விரைவில் மேற்கொள்ள வேண்டும். மாற்றுப்பாதை அமைந்தால் இதுபோன்ற கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.

ம.பொ.சி. சாலையில் இருந்து முருகன் மலைக் கோயிலுக்கு வர சுமாா் ஒரு மணி நேரம் கடக்க வேண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாள்கள், கோயில் முக்கிய விழாக்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கூடுதலான போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்தை சரிசெய்யலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT