கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுகவினா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுகவினா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
திருவள்ளூரில் ஓராண்டுக்கு ஏழை-எளியோருக்கு உணவு வழங்கும் வகையில், உணவகம் ஒன்றைத் தொடக்கி வைத்து, பல்வேறு நல உதவிகளை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா். நகராட்சி வளாகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அவா் மரியாதை செலுத்தினாா்.
நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.
முன்னதாக, கடம்பத்தூா் கிழக்கு ஒன்றியம், விடையூா் கிராமத்திலிருந்து திருவள்ளூா் வழியாக (எண் 138) அரசுப் பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வனத் துறை சாா்பில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.