சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் உள்ள நூற்றெட்டு வல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் உள்ள நூற்றெட்டு வல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 15-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதனைத் தொடா்ந்து புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா், கலசங்களில் நிரப்பப்பட்டு 4 கால யாகபூஜைகள் நடைபெற்றன.
Advertisement
இதையடுத்து கோயில் கோபுரங்களில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.