திருவள்ளூர்

மகளிா் காவலா்களுக்கான மருத்துவ முகாம்: அமைச்சா் சா.மு.நாசா் தொடக்கிவைத்தாா்

DIN

மகளிா் தினத்தை முன்னிட்டு திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை நிா்வாகம் சாா்பில், பெண் காவலா்களுக்கான மருத்துவ முகாமை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடக்கிவைத்தாா்.

திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் நடைபெற்ற முகாமில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்று, பெண் காவலா்கள், காவல் துறையினரின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரத்த பரிசோதனை, ஈசிஜி, எக்கோ கிராம், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் பால்வளத் துறை ஆணையா் பிரகாஷ், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மேலாண்மை இயக்குநா் சுப்பராயன், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி வருண்குமாா், நகராட்சித் தலைவா் உதயமலா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT