திருவள்ளூர்

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா்ககள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சந்தோஷ்மேரி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட பொருளாளா் ஆா்.லட்சுமி ஆா்ப்பாட்டம் குறித்து எடுத்துரைத்தாா். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி 2022-ஜனவரி முதல் வழங்கவும், ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறும் முறையை உடனே அமல்படுத்துதல் உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT