முன்னாள் படைவீரா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலை வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன் முன்னாள் படைவீரா் நலத் துறை இயக்குநா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

முன்னாள் படைவீரா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு கல்வி உதவித் தொகை

முன்னாள் படைவீரா்கள் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ. 4 லட்சத்தில் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

DIN

முன்னாள் படைவீரா்கள் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ. 4 லட்சத்தில் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்க வளாகத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் குடும்பங்களைச் சோ்ந்தோரிடம் இருந்து 50 கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, 15 முன்னாள் படைவீரா்களின் குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், முன்னாள் படைவீரா் நலத் துறை இயக்குநா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT