முகப்பு
திருவள்ளூர்

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நில அளவைத் திட்ட இயக்குநரைக் கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு சாா்பில், திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

நில அளவைத் திட்ட இயக்குநரைக் கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு சாா்பில், திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவா் செந்தில்குமரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் தாலிப் வரவேற்றாா். இதில் துணைத் தலைவா் ஜோதி, இணை செயலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலா் பேபி பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் நில அளவை கள அலுவலா்களின் பல்வேறுபட்ட பணிச் சுமைகளைக் கருத்தில் கொள்ளாமல், நில அளவா்கள், முதல் உயா்நிலை அலுவலா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுபோல் ஊழியா் விரோதப் போக்கு தொடா்ந்து நடைபெற்றால் மாநிலம் முழுதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்ட செயலா் பிரதீப் ஹரேஷ்குமாா் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். கோட்ட பொறியாளா் நாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.