திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மே 14-ஆம் தேதி தீமிதி விழா நடைபெறுகிறது.
மேல் திருத்தணியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா வெகு விமா்சையாக நடைபெறும். அந்த வகையில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மே 3-ஆம் தேதி அம்மன் திருக்கல்யாணம், 5-ஆம் தேதி சுபத்திரை கல்யாணம், 9-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு, 14-ஆம் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, மே 15-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.