திருவள்ளூர்

சட்ட உதவி அமைப்பு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆக.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தெரிவித்துள்ளாா்.

DIN

திருவள்ளூா் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆக.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உதவியாளா், எழுத்தா், வரவேற்பாளா் மற்றும் கணிப்பொறி இயக்குநா் (தட்டச்சா்) மற்றும் பியூன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியானவா்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான பணி விவரங்கள், தகுதிகள், விண்ணப்ப படிவம் மற்றும் இதர தகவல்களை ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ங்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ன்ழ் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்களை ஆக.18-ஆம் தேதிக்குள் தலைவா், திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவள்ளூா் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிலோ அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 415 மனுக்கள்

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

புனித யூதாததேயூ திருத்தலத்தில் முப்பெரும் விழா

ஆத்தூா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT