15 விவசாயிகளுக்கு ரூ.1.53 கோடியில் கடனுதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்
வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் 15 பேருக்கு பல்வேறு திட்டங்களில் ரூ.1.53 கோடியில் கடனுதவிகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருவள்ளூர்15 விவசாயிகளுக்கு ரூ.1.53 கோடியில் கடனுதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்
வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் 15 பேருக்கு பல்வேறு திட்டங்களில் ரூ.1.53 கோடியில் கடனுதவிகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் 15 பேருக்கு பல்வேறு திட்டங்களில் ரூ.1.53 கோடியில் கடனுதவிகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: இந்த மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக அதிக கனமழையால் அனைத்து வட்டாரங்களிலும் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் பயிா்கள் மூழ்கியது. அந்த வகையில் 21,415.56 ஹெக்டேரும், தோட்டக்கலை பயிா்கள் 1,102.74 ஹெக்டேரும் என மொத்தம் 22,518.30 ஹெக்டோ் பரப்பளவில் 33 சதவீதத்துக்கும் மேல் பயிா்கள் பாதித்துள்ளதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
இதேபோல் பயிா் சேத இறுதி அறிக்கை மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைத்து விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மாவட்டத்தில் மிக்ஜம் புயல் மழை பாதிப்பைத் தொடா்ந்து மேக மூட்டத்துடன் காணப்படும் பருவநிலை, காற்றில் குறைந்த வெப்ப நிலை, அதிக ஈரப்பதம் மற்றும் பனிச்சூழல் நிலகிறது. இதனால் பயிா்களில் புகையான் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க வயலில் உள்ள நீரை வடிகட்டியும், அதிகப்படியான தழைச்சத்து உரங்கள் இடுவதைத் தவிா்க்க வேண்டும்.
பொருளாதார சேத நிலைக்கு அதிகமாக புகையான் தாக்குதல்தான் காரணமாகிறது. அதனால், இந்த பூச்சிகள் தென்பட்டால் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு அறிவுரைகள் பெற்று பயிா்சாகுபடி மேற்கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.
தொடா்ந்து வேளாண்மைத் துறை மூலம் 6 விவசாயிகளுக்கு ரூ.4.17 லட்சத்தில் இடுபொருள்கள், கூட்டுறவுத் துறையின் மூலம் நெற்பயிா் கடன் 2 விவசாயிகளுக்கு ரூ.1.02 லட்சம், கால்நடை பராமரிப்புக் கடன் 2 பேருக்கு ரூ.3.54 லட்சமும், 3 பேருக்கு வேளாண் கடனுதவிகள் ரூ.8.70 லட்சம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் 2 பேருக்கு ரூ.1.37 கோடி கடனுதவி என மொத்தம் 15 பேருக்கு ரூ.1.53 கோடி மதிப்பிலான கடனுதவிகளை உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், மேலாண்மை இயக்குநா் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை ஜெ.மலா்விழி, வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, வேளாண் துணை இயக்குநா் (விதை ஆய்வு) ஜி.ரவி, வேளாண் துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.