முகப்பு
எண் ஜோதிடம்

மார்ச் மாத எண்கணித பலன்கள் – 2

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

எண்கணித பலன்கள்
பகிர்:

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மனதால் கூட யாருக்கும் தீங்கு நினைக்காத இரண்டம் எண் அன்பர்களே இந்த மாதம்  காரிய தாமதம் நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விருப்பத்திற்கு ஏற்ப காரியங்கள் நடக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான  மனநிலை உருவாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

Advertisement

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்:  திங்கட்கிழமை அன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.