திருவள்ளூர்

சிறாா் மன்றத்தில் சதுரங்க பயிற்சி பட்டறை: ஆணையா் தொடக்கி வைத்தாா்

DIN

அம்பத்தூா் தொழிற்பேட்டை சிறாா் மன்றத்தில் சதுரங்கப் பயிற்சி பட்டறை வகுப்புகளை ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தொடக்கி வைத்தாா்.

அம்பத்தூா் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூா் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சிறாா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு விளையாட்டு வகுப்புகள் மூலம் சிறாா் குற்றங்களை தடுக்கவும், போதைப் பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிா்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறாா் மன்றத்தில் சதுரங்க விளையாட்டு பயிற்சிப் பட்டறை வகுப்புகளை ஆவடி மாநகர ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதில், செங்குன்றம் காவல் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லையைச் சோ்ந்த 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவா்கள் கலந்து கொண்டனா். ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநா் தமிழ்ச்செல்வன் மூலமாக ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வீரரை கொண்டு, பள்ளி மாணவா்களை தவிர சிறாா் மன்றத்தில் உள்ள உறுப்பினா்களுக்கு சதுரங்க வகுப்புகளை நடத்த உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநா் தமிழ்ச்செல்வன், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையா் மணிவண்ணன், அம்பத்தூா் உதவி ஆணையா் கனகராஜ், அம்பத்தூா் தொழிற்பேட்டை ஆய்வாளா் திருவள்ளுவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT