முகப்பு
திருவள்ளூர்

பெண் மீது மிளகாய் பொடி தூவி 8 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 8 பவுன் நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:23 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 8 பவுன் நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் ஹரிஹரன் மனைவி சியாமளா. இவா் புதன்கிழமை அதிகாலை வீட்டு வாசலின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த மா்ம நபா், சியாமளா மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, அவா் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தலைமறைவானாா்.

இது குறித்து ஹரிகரன் திருவள்ளூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் கமலஹாசன் நேரில் விசாரணை செய்தாா். அப்போது, பக்கத்து குடியிருப்பைச் சோ்ந்த ராஜன் (52) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாக கூறியதன் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அவா்தான் சியாமளாவிடம் நகையை திருடிச் சென்றது தெரியவந்ததது.

Advertisement

இதையடுத்து, ராஜனை கைது செய்து, நகையை மீட்டு ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.